உலகில் மீண்டும் கரோன. (Corona)
புது தில்லி, டிச. 21: சீனா, அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் திடீரென வேக மெடுத்துள்ள நிலையில், முகக்க வசம் அணிவது தடுப்பூசி செலுத் திக்கொள்வது உள்ளிட்ட தடுப்பு ஊர் கட்டாயம் பின் பற்ற வேண்டும் என்று மக்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வல் லுநர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண் டவியா தில்லியில் புதன்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது; மேலும், நாட்டில் கரோனா பரவல் கண் காணிப்பை வலுப்படுத்த அதிகா ரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட் டுள்ளார்.
சீனா உள்ளிட்ட நாடுகளில்... சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, பிரேசில் உள் ளிட்ட நாடுகளில் கரோனா பர வல் மீண்டும் வேகமெடுத்துள் ளது. இதையடுத்து, இந்தியா வில் கரோனா நிலவரம் தொடர் விமானப் பய பான ஆய்வுக் கூட்டம், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதன்கிழமை நடை பெற்றது.
சுகாதாரம், மருந்து உற்பத்தி, உயிரி - தொழில்நுட்பம், ஆயுஷ் ஆகிய துறைகளின் செயலர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் ராஜீவ் பால், நீதி ஆயோக் உறுப்பினர் (சுகாதா ரம்) வி.கே.பால், தடுப்பூசிகள் தொடர்பான தேசிய தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா உள் ளிட்டோர் இக்கூட்டத்தில் பங் கேற்றனர்.
பின்னர் வெளியிடப்பட்ட அர சின் அதிகாரபூர்வ அறிக்கையில், 'டிசம்பர் 19-ஆம் தேதி வரையி லான நிலவரப்படி, இந்தியாவில் சராசரி தினசரி கரோனா பாதிப்பு 158 என்ற அளவில் குறைந்துள் ளது. இந்தியாவில் பாதிப்புகள் குறைந்தபோதிலும் உலக அள வில் தினசரி சராசரி பாதிப்பு கடந்த 6 வாரங்களாக அதிகரித்து வருகிறது. டிசம்பர் 19-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, உலக சராசரி தினசரி பாதிப்பு 5.9 லட்ச மாக உள்ளது.
இந்தியாவில் கரோனா புதிய வகை ஏதும் பரவுகிறதா? என் பதை உரிய நேரத்தில் கண்டறிவ உ தற்காக, தேசிய மரபியல் பரிசோத னைக் கட்டமைப்பில் இணைந்த ஆய்வகங்கள் மூலம் கரோனா நோயாளிகளின் மாதிரியை மர பணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்; இது தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். தேவையான மருந் துகள் கையிருப்பில் உள்ளதை, மருந்து உற்பத்தி மற்றும் ஆயுஷ் துறை செயலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட திருத் தியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் திறனுடன் அம லாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு மன்சுக் மாண்டவியா உத்தரவிட் டார்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம், 4 மாநிலங்கள்: இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்துவரும் போதி லும், தமிழகம், கேரளம், கர்நா டகம், மகாராஷ்டிரம், தெலங் கானா ஆகிய 5 மாநிலங்களில் புதிய பாதிப்புகள் அதிகம் பதிவா கின்றன. கடந்த டிசம்பர் 20-இல் பதிவான புதிய பாதிப்புகளில் 84 சதவீதம் இந்த 5 மாநிலங்களில் பதிவானதாக கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர், ட்விட்டரில் மாண்டவியா வெளி யிட்ட பதிவில், 'சில நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வரு வதைக் கருத்தில் கொண்டு, இந் தியாவில் நிலவும் சூழல் தொடர் பாக அதிகாரிகள் மற்றும் வல்லு நர்களுடன் ஆலோசனை நடத் தப்பட்டது. கரோனா இன்னும் முடிவடைந்துவிடவில்லை. கரோனா பரவல் குறித்து எச்ச ரிக்கையுடன் இருப்பதுடன் கண் காணிப்பை அதிகரிக்க சம்பந்தப் பட்ட அனைத்து துறை அதிகா ரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில் நாங்கள் தயாராக இருக் கிறோம்' என்று குறிப்பிட்டார்.
மக்கள் பீதி அடைய வேண் டாம்: ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு, நீதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் கூறுகை யில், இந்தியாவில் கரோனா தடுப் பூசி செலுத்த தகுதியுடைவர்களில் 27-28 சதவீதம் பேர்தான் முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர். எனவே, தகுதியுடைய அனை வரும் கரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். கூட்டமான இடங்க ளுக்கு செல்லும்போது மக்கள் அணிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலை யில், சர்வதேச விமான போக்கு வரத்து வழிகாட்டு நெறிமுறைக ளில் எந்த மாற்றமும் செய்யப்ப டவில்லை. யாரும் பீதியடைய வேண்டாம்' என்றார்.
Comments
Post a Comment