ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு
லாக்கர் அறையின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் மற்றும் பொதுவான பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கட்டாயம் சேமித்து வைத்திருக்க வேண்டும்.
வங்கி லாக்கர் பயன்படுத்துவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல்கள் ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.
குறைந்தபட்சம் 180 நாட்கள் லாக்கர் அறையின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் மற்றும் பொதுவான பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கட்டாயம் சேமித்து வைத்திருக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
புதிய விதிமுறைப்படி வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள பொருட்களுக்கு ஏற்படும் இழப்புக்கு வங்கிகளே பொறுப்பேற்க வேண்டும். லாக்கரில் சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்பதை வாடிக்கையாளர்கள் உடனான ஒப்பந்த பத்திரத்தில் வங்கிகள் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
லாக்கர் வாடிக்கையாளர்களிடம் 3 ஆண்டுகளுக்கான முன் வைப்புத் தொகையை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் லாக்கர் வாடகை செலுத்தாவிட்டால் அவர்களது லாக்கர்களை உடைக்கவும் வங்கிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் வங்கி ஊழியர்களால் மோசடி செய்யப்பட்டாலோ அல்லது தீ விபத்தால் சேதமடைந்தாலோ வாடிக்கையாளர்களுக்கு வங்கி கட்டணத்தைவிட 100 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment